Saturday, February 28, 2015

3.திருநெல்வாயில்



3.திருநெல்வாயில்
*****************************
"சிவபுரி" என்ற பெயருடன் சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் செல்லும் சாலையில் (பல்கலை கழகத்துக்குள் நுழையாமல்)கவரப்பட்டு சாலை சென்று,பேரணாம்பட்டு சாலையில் போனால் சிவபுரி உள்ளது.
திரு ஞானசம்பந்தர் பதிகம் ஓன்று உள்ளது
இறைவன் :உச்சிநாதேஸ்வரர்
இறைவி: கனகாம்பிகை
சிறப்பு: கன்வமகரிஷி வழிப்பட்ட ஸ்தலம்

உச்சிநாதர் கோவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவதலமாகும். இந்தக் கோயில் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் 3வது தலம் ஆகும். அகத்திய முனிவருக்கு சிவபெருமான்காட்சியளித்த தலமாகும். திருஞான சம்பந்தரும், அவருடன் அறுபத்து மூன்று சைவ அடியார்களும் இத்தலத்திற்கு வரும்பொழுது, உச்சிகாலமானது. அந்நேரம் மிகுந்த பசியோடு இருந்தவர்களுக்கு, இறைவன் கோவில் பணியாளர் வடிவில் வந்து உணவளித்தமையால் உச்சிநாதர் என்ற பெயர்பெற்றார். இக்கோயிலின் அம்பிகை பெயர் கனகாம்பிகை என்பதால் இக்கோயிலை இவ்வூர் மக்கள் கனகாம்பிகை கோயில் எனவும் வழங்குகின்றனர்.

ஊர்ப் பெயர் வரலாறு 

சிதம்பரம், நகருக்கு உட்பட்ட பிரதேசத்தின் ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதியே முற்காலத்தில் "திருநெல்வாயில்' என அழைக்கப்பட்டது.

தல பெருமை

  • சிவலிங்கத்தின் பின்புறம் சிவ பார்வதி திருமணக்கோலத்துடன் அருள் பாலிக்கின்றனர்.
  • இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


[Image1]


மூலவர்:உச்சிநாதர் என்ற மத்யானேஸ்வரர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:கனகாம்பிகை
தல விருட்சம்:நெல்லி
தீர்த்தம்:கிருபா சமுத்திரம்
ஆகமம்/பூஜை:-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருநெல்வாயில்
ஊர்:சிவபுரி
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு


No comments:

Post a Comment