Saturday, February 28, 2015

2.திருவேட்களம்





பாசுபதேசுவரர் கோயில் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள திருவேட்களம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் பாசுபதேஸ்வரர், தாயார் நல்லநாயகி (சமஸ்கிருதம்:சத்குணாம்பாள்). இத்தலத்தின் தலவிருட்சமாக மூங்கில் மரமும், தீர்த்தமாக கிருபா தீர்த்தமும் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 2வது தலம் ஆகும்.. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


சம்பந்தர் இங்கிருந்து சிதம்பரத்தைத் தரிசித்தார் எனப்படுகிறது. அர்ச்சுனனுக்கு பாசுபதம் தந்தருளிய தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). நடராசர் முருகனாகவும் முருகன் நடராசராகவும் தோன்றிய தலமாகக் கூறுவார்கள்

No comments:

Post a Comment